Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் ரூ.90,000 கோடி சர்வதேச முதலீடுகள்

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் ரூ.90,000 கோடி சர்வதேச முதலீடுகள்

ஆண்டுக்கு 5,55,610 டன் அளவுக்கு பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் துணைப் பொருட்களை தயாரித்து வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் ரூ.90,000 கோடி மதிப்பிலான சர்வதேச முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், சர்வதேச தூய்மை எரிசக்தி சந்தையில் இந்தியா அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்கள் இதுவரை 23 முக்கிய விநியோக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. 


இவற்றின் மூலம் ஆண்டுக்கு 5,55,610 டன் அளவுக்கு பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் துணைப் பொருட்களை தயாரித்து வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமான விநியோகம் சர்வதேச ஏற்றுமதிக்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 9.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.90,000 கோடி) மதிப்பிலான தூய்மை எரிசக்தி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.


 நடப்பண்டில் மட்டுமே 4 லட்சம் டன்னுக்கும் அதிகமான விநியோகத்துக்கு 18 புதிய கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்திய நிறுவனங்கள் கிரீன் அம்மோனியா மற்றும் கிரீன் மெத்தனால் ஆகியவற்றை சர்வதேச சந்தையில் மிகக் குறைந்த விலையில் வழங்கி வருவதால், ஐரோப்பிய மற்றும் ஜப்பான் சந்தைகளில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.


குறிப்பாக, கப்பல் போக்குவரத்துக்கான மாற்று எரிபொருளாகவும், அனல் மின் நிலையங்களில் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், உரத் தயாரிப்பு மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளிலும் இந்த பசுமை ஹைட்ரஜன் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

ஏக்மி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் முன்னணி சர்வதேச நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தங்கள், நாட்டின் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் எதிர்காலத்தில் நாட்டின் தொழில் துறையை அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Carrot prices crash as supplies pile up
அடுத்த செய்தி
பட்டியலிடப்பட்ட முதல் நாளில் சாதித்த ஐபிஓக்கள்

தொடர்புடைய செய்திகள்